நண்பராக்கிக் கொள்ளுங்கள் தூரத்திலிருந்து பார்த்தால், புரியாத உருவம் ஓர் ஆவி போல தெரியும். அருகில் சென்றால், அதுவும் பல விதத்தில் உங்களைப் போல ஒரு மனிதர் தான் என்று புரியும். ஒருவரை அறிந்துக் கொள்ளாத போது, முக்கியமில்லாத பேதங்கள் மட்டும் தெரியும், பயமும் தோன்றும். அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்று தான் தெரியும்.
Posts in category ஊக்கம் கருத்துக்கள்
கருணை தான் முக்கியமான விதி
கருணை தான் முக்கியமான விதி வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ளவோ, அல்லது மணம் புரிந்துக் கொள்ளவோ ஒரு துணைக்காக நீங்கள் தேடும்போது, “கருணையை” முக்கிய கட்டளை விதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவரோ அவளோ தொழிற்பண்பட்டவராகவோ, செல்வந்தராகவோ, அழகானவராகவோ அல்லது திறமையானவராகவோ இருந்தால் அது ஒரு மிகவும் சிறந்தது தான். ஆனால் இவையெல்லாம் நீடிக்காமல் போகலாம், அல்லது சிறிது காலம் கழித்து அவ்வளவு முக்கியமில்லாமல் போகலாம். ஆனால் கருணை எப்போதும் மிகவும் அவசியமாக இருக்கும், எப்போதும் மேலும் […]
நம்மையே நேசிப்பது
நம்மையே நேசிப்பது மற்றவர்களுடைய ஒப்புதலும் மற்றவர்கள் நம்மை விரும்புதலும் நமக்கு ஒரு சுகமான உணர்ச்சியை தருகிறது. ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கு இவை கட்டாயமும் இல்லை, இன்றியமையாதவையும் இல்லை. பிறத்தியார் நம்மை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், அதனால் நாம் குறைவதும் இல்லை, மேம்படுவதும் இல்லை. முக்கியமானது என்னவென்றால், நாம் நம்மையே நேசிப்பதும் அங்கீகரிப்பதும் தான். இதை நாம் சாதித்து விட்டால், மற்றவர்களுடைய ஒப்புதலுக்காக நாம் அவதிப் பட வேண்டிய அவசியமில்லை.
மற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது
மற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது நாம் நம்மை ஒருபோதும் மற்றவருடன் ஒப்பிடக்கூடாது. வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட சிலர் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள், சிலர் தாழ்வான நிலையில் இருப்பார்கள். மற்றவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம், கற்றுக்கொள்வது நல்லதுமாகும். ஆனால் நமது வெற்றியையும் தோல்வியையும் மற்றவர்களை வைத்து நாம் அளவிடக் கூடாது. நாம் நமது திறமைகளுக்கும் ஆற்றல்களுக்கும் ஒப்பாக வாழ்கிறோமா என்று தான் அளவிட வேண்டுமே தவிர, மற்றவர்களின் வாழ்வில் நடப்பதைக் கொண்டு நாம் நம்மை அளவிடக் […]
இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்...
இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள் இயற்கையுடன் நேரம் செலுத்துங்கள். கடற்கரை, பூங்கா, பச்சைப் பசேலென்ற புல்வெளி, நயத்தகு மரங்கள், அழகான மலர்கள் கொண்ட நந்தவனங்கள், ஓடை, நதி, இவையெல்லாம் தான்மை உணர்வின்றி, அமைதியாக உள்ளன. அவற்றோடு நாம் இருக்கும்போது, அவற்றின் அமைதியும் நிம்மதியும் நம்முடன் இணைந்துக் கொள்கின்றன. நாமும் நிம்மதி பெறுகிறோம்.
ஒரு குறிக்கோள் உள்ளது
ஒரு குறிக்கோள் உள்ளது இந்த உலகத்தில் நீங்கள் இருப்பதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மற்றவர்களைப் போலவே மிகவும் முக்கியமானவர். மற்ற எவரையும் உம்மைப் பற்றி இதற்கு மாறாக சொல்லவோ, உங்களைத் தாழ்வாக நடத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்கள் சொந்த இயல்பில் வாழுங்கள். மேலும், உங்களுக்காக உள்ள குறிக்கோள் நிறைவேற உங்களை உதவுங்கள்.
நேரம் பறந்து செல்கிறது
நேரம் பறந்து செல்கிறது நேரம் பறந்து செல்கிறது. உங்கள் வாழ்வில் மிகுந்த காலம் இருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் வாழ்க்கை கணிக்க இயலாதது; முன்னறிந்து கூற முடியாதது. எனவே உபயோகமில்லாத விஷயங்களிலும், மன அமைதியைக் கெடுக்கும் மனிதர்களுடனும், கடந்த காலத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதிலும் நேரத்தை வீணாக்க வேண்டாம். தளரா நம்பிக்கை கொள்ளுங்கள். நாளை நீங்கள் கவனித்துக் கொள்ளப் படுவீர்கள் என்று அறிந்துக் கொண்டு, இன்று முழுதாக வாழுங்கள்.
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். உங்களைப் போல யாரும் கிடையாது. நீங்கள் இந்த அற்புத உண்மையை உபயோகப்படுத்தி, உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள ஆக்கப்பூர்வமான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழச் செய்யலாம்; அல்லது உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள எதிர்மறையான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்தத்துடன் வாழச் செய்யலாம்.