உண்மையான உள்ளார்வமிக்க முயற்சிகள் ஒரு போதும் வீணாகாது உண்மையான உள்ளார்வமிக்க முயற்சிகள் ஒரு போதும் வீணாகாது. நிச்சயமாக வெற்றிகள் விளையும். லௌகீகமானாலும் சரி, ஆன்மீகமானாலும் சரி.
Posts in category உற்சாகம்
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாத...
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் (கட்டுரை) விஷயம் மிகவும் எளிதானது தான். நீங்கள் நல்லவர் இல்லை என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள். ஏதாவது தவறு தெரிந்தால், அதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க மட்டுமே இல்லாமல், அது உங்களுக்கே நல்லது என்பதற்காகத் திருத்திக் கொள்ளுங்கள். குதர்க்கமான, எதிர்மறையான விமர்சனங்களோ அல்லது […]
எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்
எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் எல்லாம் நமது நோக்கப் பாங்கில் தான் உள்ளது…அது நரகத்தையும் சொர்க்கமாக மாற்றக்கூடும். ஒரு முகத்தைப் பார்க்கிறீர்கள்…அதன் நிறத்தாலோ, இனத்தாலோ, முக அம்சங்களாலோ உங்களுக்கு அது பிடிக்கவில்லை…நீங்கள் ஏற்கனவே அதைப் பற்றி ஒரு பக்கச்சார்பான அபிப்ராயம் அமைத்திருக்கிறீர்கள். ஆனால், திறந்த மனதுடன் மீண்டும் ஒரு முறைப் பாருங்கள். அது உங்கள் கருத்துப்படி உள்ள அழகை விட வித்தியாசமாக இருந்தாலும், உங்களது முக அம்சங்களை விட வேறுபட்டு இருந்தாலும், அதற்கு அதன் சொந்த, தனிப்பட்ட […]
உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந...
உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும் நீங்கள் ஒரு வேலையில் ஈடுபடும்போது, உங்களது சிறந்த திறனுடன், ஒரே தடத்தில், ஒருமுக நோக்குடன், முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்துங்கள். அந்த வேலை பெரியதாக கருதப்படுகிறதா அல்லது அற்பமாக கருதப்படுகிறாதா என்பது முக்கியமில்லை. வேலையை சிறந்த முறையில் செய்வதன் மேல் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு உண்மையான சந்தோஷமும், நிறைவான உணர்வும், திருப்தியும் ஏற்படும். விளைவுகளைப் பற்றி நினைக்காதீர்கள்; ஏனெனில், உங்களது முழு […]
உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்...
உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.
எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்
எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம் எளிதான விஷயங்கள் கடினமாக்கப் படக் கூடாது. ஒரு சின்ன விஷயத்தை நாம் பெரிதாக்கினால், அது எப்போதுமே ஒரு எளிதான விதத்தில் முடிவாகாது. அது ஒரு அநாவசியமான விவாதத்தை ஆரம்பிக்கலாம்; சண்டையையும், கொடிய சொற்களையும் புண்பட்ட உணர்ச்சிகளையும் விளைவிக்கலாம்; அது நாள் முழுவதையுமே நாசமாக்கலாம். ஒரு சூழ்நிலையை அமைதியாக, அமளியும் கொந்தளிப்பும் இல்லாமல் கையாள முடியும் வாய்ப்பு இருந்தால், அதை எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரண விஷயத்தை வெடிக்கும் இயல்புடையதாக்காமல் இருப்போம்.
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது த...
இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது… எப்போதும் உங்களது இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்ளுங்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது. ஆடம்பரமான, உயர்நிலை சார்ந்தவர்களுடன் பழகும்போது சில சமயம் சற்று இக்கட்டாகத் தோன்றினாலும், அவர்களுக்கு சமமில்லை என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் இயல்பாக நடந்துக் கொண்டால் தான், அவர்கள் உங்களை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். வேறு யாரோ போல் நடந்துக் கொள்வதால் ஒரு பயனுமில்லை.