உடையும் செயலும் நமது பொறுப்பு
உடையும் செயலும் நமது பொறுப்பு
நாம் தொழில் சார்ந்த இடங்களிலும், பொது இடங்களிலும் மரியாதை பெற விரும்பினால், நாம் பொறுப்புடன் உடை அணிய வேண்டும், செயல்பட வேண்டும். யாரையும் தவறான விதத்தில் நடந்துக் கொள்ள சிறிதும் தூண்டாமல் இருக்க நாம் ஜாக்கிரதையாக, கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஒருவர் தொழிற்பண்பட்டவராக இருக்கும் போதும், யாராவது அவர்களுக்கு தொல்லைக் கொடுத்தாலோ, அல்லது அவர்களது நிர்பந்தமான சூழ்நிலைகளை அறிந்துக் கொண்டு அவர்களை தமது சுய நலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள விழைந்தாலோ, பிறகு அது சரியான விதத்தில் கையாளப்பட வேண்டும். மனிதர்களின் செயல்களின் விளைவுகள், சீக்கிரத்திலோ அல்லது சில காலத்திற்கு பிறகோ அவர்களை பாதிக்கும் என்பது தான் நாம் காணும் நியதி.