ஓரு பெண்ணின் முழு நிறைவான வாழ்க்கை
ஓரு பெண்ணின் நிறைவான வாழ்க்கை
ஒரு பெண் முழு நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவள் ஒரு மனைவி, அல்லது ஒரு அன்னை, மற்றும் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவள் ஒரு கணவனை ஏற்றுக் கொள்ளவோ, குழந்தைகளைப் பெறவோ அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கிடையில் குடும்ப வாழ்வில் ஈடுபடவோ “விரும்பி” தேர்ந்தெடுத்தால், அது நல்லது தான். ஆனால், அவள் தன்னை ஒரு முழு நிறைவான நபராக உணருவதற்கு, இப்படிப்பட்ட ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து தான் ஆக வேண்டுமென்று அவசியமில்லை. அவள் எப்போது மனதில் முழுமையாக உணருகிறாளோ, அப்போது தான் அவளது வாழ்க்கை முழு நிறைவடைகிறது.