குழந்தைகள் பெற்றோர் அல்லது பொறுப்பாளரை நம்பி பின்பற்றுகின்றனர்
குழந்தைகள் பெற்றோர் அல்லது பொறுப்பாளரை நம்பி பின்பற்றுகின்றனர்
நம் குழந்தைகளின் முன்னால் ஒரு மனிதரைத் துச்சமாக நடத்தினால், சிறுமி ஆண்களை வெறுத்தவாறு வளரலாம், சிறுவன் சுய மரியாதையின்றி தன்னையே வெறுத்தவாறு வளரலாம். நம் குழந்தைகளின் முன்னால் ஒரு பெண்ணைத் துச்சமாக நடத்தினால், சிறுவன் பெண்களை வெறுத்தவாறு வளரலாம், சிறுமி சுய மரியாதையின்றி தன்னையே வெறுத்தவாறு வளரலாம்.
ஆனால், பெண்களும் ஆண்களும், நமது குழந்தைகளின் முன்னால், ஒருவரை ஒருவர் பாராட்டி, குறைகளை மன்னித்து, அன்புடனும் கருணையுடனும் நடந்துக் கொள்ள முயன்றால், சிறுவனோ சிறுமியோ, சுய மரியாதையுடனும், சகிப்புத்தன்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் வளருவதுடன், உலகத்தில் சுமார் பாதி மக்கள் தொகையை வெறுக்காமலும் வளரலாம்.