சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்
சந்தோஷத்திற்காக விட்டுக் கொடுங்கள்
ஒரு உறவு அல்லது மண வாழ்வில், சுய கருத்தை நிரூபிப்பதை விட, அல்லது எப்போதும் தன் இச்சைப்படியே நடப்பதை விட, ஒத்துழைத்து இசைந்து செல்வது முக்கியம். தன் சொந்த கருத்து தான் சரியென்று நிரூபிப்பதால் தான்மை உணர்வின் அகந்தைக்கு ஒரு ஊட்டம் கிடைக்கலாம்; ஆனால், அவ்வப்போது மற்றவரை மகிழ்விப்பதைச் செய்யாவிட்டால், அது அந்த நாள் முழுவதையும், அல்லது நல்லுறவையே கூட பாதிக்கக் கூடும். சாமர்த்தியமாக இருங்கள். சந்தோஷத்திற்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்கள். அதனால் குறைவேதும் இல்லை.