நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும்
நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும்
நாம் ஒரு பரிசு அல்லது அன்பளிப்பை ஒருவருக்கு கொடுப்பதற்கு முன், பிறகு அந்த பரிசின் மேலும், அது எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதன் மேலும், நமக்கு ஒரு உரிமையும் இருக்காது என்று தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் நாம் விரும்பும் விதத்தில் அதை உபயோகப்படுத்தாமல் போகலாம். மேலும் அவர்கள் அதை தாம் விரும்பும் இன்னொருவருக்குக் கொடுக்கவும் செய்யலாம். நாம் பரிசை அவர்களுக்கு நிபந்தனையின்றி கொடுக்க வேண்டும்.
அப்போது தான் அது உண்மையான நன்கொடை அளிக்கும் செயலாகும். இல்லையெனில், அது “நான் ஈகை அளிக்கிறேன்” என்ற வெறும் அகங்காரம் தான்.