ஒருவரின் குணங்களை நீங்கள் விரும்புவது போல் எதிர்பார்க்க வேண்டாம் ஒருவரின் நல்ல தன்மைகளை உள்ளபடியே பாராட்டுவது விவேகம். நீங்கள் நேசிக்கும், அல்லது நேசிக்க விரும்பும் ஒருவரிடம், நீங்கள் விரும்பும் குணங்களைக் காண எதிர்பார்க்க வேண்டாம். அவர்களிடமே உள்ள நல்ல, நேயமான தன்மைகளைக் கண்டு பாராட்டுங்கள். பிறகு அவர்கள் எவ்வளவு இனிய, நேர்த்தியான, அன்பான, உபயோகமான நபர் என்பது உங்களுக்கு தெரிய வரும். அதன் பிறகு தான் அவர்களிடம் நீங்கள் நெருங்கிப் பழகி உண்மையாக சந்தோஷம் அடைய […]
Posts in category ஊக்கம் கருத்துக்கள்
வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான்...
வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும் ஒரு வேலையை மிகவும் சிறந்த முறையில் செய்யும்போது கிடைக்கும் திருப்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது. அதன் பொருள், நமது திறன்களுக்குத் தகுந்தவாறு நம்மால் முடிந்த வரையில், முதலிலிருந்து கடைசி வரையிலும் வேலையை சிறந்த முறையில் செய்து முடிப்பதாகும். அது தான் வேலையின் வெற்றி. அது தான் உண்மையான சந்தோஷம்.
ஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்ய வேண்ட...
ஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்யுங்கள் எதாவது ஒரு விதத்தில் அது உங்களுக்கு சந்தோஷம் தருகிறது என்பதற்காக மட்டுமே ஒரு செயலைச் செய்யுங்கள். ஆனால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேராமல்செய்யுங்கள். மற்ற காரணங்கள் எல்லாம் போலியானவை; அவை உங்களை உபயோகமில்லாத நடவடிக்கைகள் கொண்ட ஒரு முடிவில்லாத புதிர்பாதையில் மாட்டிக்கொள்ள விட்டு விடும்.
ஓரு பெண்ணின் முழு நிறைவான வாழ்க்கை
ஓரு பெண்ணின் நிறைவான வாழ்க்கை ஒரு பெண் முழு நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவள் ஒரு மனைவி, அல்லது ஒரு அன்னை, மற்றும் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவள் ஒரு கணவனை ஏற்றுக் கொள்ளவோ, குழந்தைகளைப் பெறவோ அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கிடையில் குடும்ப வாழ்வில் ஈடுபடவோ “விரும்பி” தேர்ந்தெடுத்தால், அது நல்லது தான். ஆனால், அவள் தன்னை ஒரு முழு நிறைவான நபராக உணருவதற்கு, இப்படிப்பட்ட ஏதாவது ஒரு குறிப்பிட்ட […]
உலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார...
உலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகத்தில் எவ்வளவு நல்லவர்கள், கருணையுள்ளவர்கள் இருக்கிறார்கள்! சில சமயங்களில் சிலர் இரக்கமில்லாத, தீயவர்களாகத் தோன்றலாம். ஆனால், பெரும்பாலானவர்கள், தங்கள் வழியை விட்டு கூட, முற்றிலும் அந்நியர்களாக இருந்தால் கூட, மற்றவர்களுக்கு, சிறிதோ, பெரிதோ, தேவைப்படும் உதவியை அளிக்கும் எவ்வளவு அன்பான, தயவுள்ள, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது..மனதைத் தொடுகிறது. ஆமாம். நாம் செய்வதற்கு நல்ல, நேர்மறையான செயல்கள் நிறைய இருக்கின்றன.
குழந்தைகள் பெற்றோர் அல்லது பொறுப்பாளர...
குழந்தைகள் பெற்றோர் அல்லது பொறுப்பாளரை நம்பி பின்பற்றுகின்றனர் நம் குழந்தைகளின் முன்னால் ஒரு மனிதரைத் துச்சமாக நடத்தினால், சிறுமி ஆண்களை வெறுத்தவாறு வளரலாம், சிறுவன் சுய மரியாதையின்றி தன்னையே வெறுத்தவாறு வளரலாம். நம் குழந்தைகளின் முன்னால் ஒரு பெண்ணைத் துச்சமாக நடத்தினால், சிறுவன் பெண்களை வெறுத்தவாறு வளரலாம், சிறுமி சுய மரியாதையின்றி தன்னையே வெறுத்தவாறு வளரலாம். ஆனால், பெண்களும் ஆண்களும், நமது குழந்தைகளின் முன்னால், ஒருவரை ஒருவர் பாராட்டி, குறைகளை மன்னித்து, அன்புடனும் கருணையுடனும் நடந்துக் கொள்ள […]
இன்று திறம்பட வாழலாம்
இன்று திறம்பட வாழலாம் கடந்த காலத்தின் நிகழ்வுகள் மறைந்து விட்டன. அவற்றைப் பற்றி யோசிப்பதில் ஒரு பலனுமில்லை. கடந்த காலத்தைப் பற்றி வேதனைப் படுவதும் வருந்துவதும் முற்றிலும் பயனற்றது. இன்று எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். நமது மனப்பாங்கு நேர்முறையாக இருக்க வேண்டும், நோக்கம் நன்னம்பிக்கை உள்ளதாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சந்தோஷம் விரும்புகிறோமோ அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்.
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்ல...
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை உங்கள் அற்பமான விருப்புகள் வெறுப்புகள் இவற்றில் எதிலாவது உங்களுக்கு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், அதை நீங்கள் மற்றவர் ஒருவருக்கு தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் அதை வரவேற்கவில்லையெனில், அதைப் பற்றி அவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வழி உங்களுக்கு உள்ளது, மற்றவர் அவர் வழியில் போகட்டும். சில சமயம் நாம் மற்றவர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளிக்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக மற்றவர்களுடன் போராடுவது நேரத்தை வீணக்குவதாகும். […]
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் திட நம்பிக்கை இருந்தால், அதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கட்டாயம் மற்றவரின் சொற்களைக் கேட்டுக் கொள்ளுங்கள், அதில் ஏதாவது பயனுள்ளதா என்றும் பாருங்கள். ஆனால், உங்களைப் பற்றி திடமான நம்பிக்கை வைத்துக் கொண்டு, நீங்களே தீர்மானம் செய்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு மருத்துவரென்றால், ஒருவித சிகிச்சையை நம்புகிறீர்கள் என்றால், மற்றவர் ஒருவர் வேறொரு மருத்துவரின் சிகிச்சையை புகழ்ந்து சிலாகித்தால், அதை மதிப்பிடுங்கள்; ஆனால், உங்கள் […]
விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்
விரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும் தவறுகள் ஏற்படுகின்றன. எல்லோரும் தவறுகள் செய்கின்றனர். அது பரவாயில்லை. எது சரியில்லையென்றால், செய்த தவறுக்கு கூடிய சீக்கிரம் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான். ஏதோ கட்டுப்பாடு இழந்து சொற்களோ செயல்களோ நிகழ்ந்து விட்டன. ஒருவேளை சோர்வு அல்லது அதிக கோபம் இருந்திருக்கலாம். மற்றவரும் பதிலுக்கு உங்களைப் போலவே நடந்துக் கொள்ளலாம், அல்லது அமைதியாக இருக்கலாம். ஆனால், சம்பவத்தை ஆரம்பித்தது நீங்களானால், அல்லது முதலாவதாக மற்றவரை துன்புறுத்தும் விதத்தில் பேசியதோ ஏதாவது […]