இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்
இயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்
இயற்கையுடன் நேரம் செலுத்துங்கள். கடற்கரை, பூங்கா, பச்சைப் பசேலென்ற புல்வெளி, நயத்தகு மரங்கள், அழகான மலர்கள் கொண்ட நந்தவனங்கள், ஓடை, நதி, இவையெல்லாம் தான்மை உணர்வின்றி, அமைதியாக உள்ளன. அவற்றோடு நாம் இருக்கும்போது, அவற்றின் அமைதியும் நிம்மதியும் நம்முடன் இணைந்துக் கொள்கின்றன. நாமும் நிம்மதி பெறுகிறோம்.