உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு
உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு
ஞானமுள்ள உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கும். அவை தற்போது தேவையில்லை, இப்போது எல்லாம் நலமாக உள்ளது என்று தோன்றினாலும், ஞானியரின் மேன்மையான அறிவுரைகளைப் படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, சிந்தனை செய்தவாறே இருப்பது தான் விவேகம். ஏனெனில், எதிர்காலத்தில், நீங்கள் மிகவும் துன்புறும்படி ஏதாவது நிகழ்ச்சிகள் நிகழலாம். அப்போது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமலோ, அல்லது சாந்தமாக செயல்பட முடியாமலோ போகலாம்.
ஆனால், எப்போதும் தாமே சாந்தமும் அமைதியும் கொண்ட ஞானியரின் வழித்துணையுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தால், அவரது மனோபலமும் அமைதியும் உங்கள் மனதில் ஏற்படும். இன்னல்கள் நிகழும்போது, உங்கள் மனம் அவற்றை வெல்ல தயாராக இருக்கும்.