தைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும் இதை நம்புங்கள்…உலகத்தையும் அதன் இன்னல்களையும் திறம்பட சமாளிக்க தைரியம் மிகுந்த உதவி அளிக்கும். அதோடு மட்டுமில்லாமல், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். கடினமான நிலைகளிலும், கொடிய தீய மனிதர்களிடமும் தைரியமாக இருப்பது எளிதில்லை தான். ஆனால் ஒரு முறை தைரியமாக செயல் பட்டபின், எவ்வளவு சிறப்பாகவும் வலிமையாகவும் உணருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். பிறகு நீங்கள் பழைய நிலைக்கு திரும்பவே மாட்டீர்கள்.
Posts in category உற்சாகம் கருத்துக்கள்
விவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்த...
விவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை நமக்கு தேர்ந்தெடுக்க பல வழிகள் அளிக்கிறது. அதில் விவேகமான, சாமர்த்தியமான வழிகளைத் தேர்ந்தெடுங்கள். அவை மிகச் சிறப்பாகவோ, அற்புதமாகவோ, கிளர்ச்சி ஊட்டுவதாகவோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் உங்கள் வாழ்வை மேம்படுத்தி, திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ உதவும் சாமர்த்தியமான வழிகளைத் தேர்ந்தெடுங்கள்.
அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன...
அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள் நீங்கள் எப்போதும் ஒரு வலிமையான நேர்மறையான மனப்பாங்கு வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கெட்ட சம்பவம் நிகழ்ந்தாலோ, அல்லது யாராவது மனம் வருந்தும்படி ஏதாவது சொன்னோலோ, செய்தாலோ, நொறுங்கி விடாதீர்கள்…தைரியமாக இருங்கள்! உங்களுக்குள் “அதனால் என்ன?!!” என்று சொல்லிக் கொண்டு, முன்னோக்கிச் செல்லுங்கள். இன்னல்கள் மேகங்கள் போன்றவை…அவை கடந்துச் சென்று விடும். எல்லாம் காலப்போக்கில் சரியாகி விடும். மனதை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது
அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது எல்லாவற்றிற்கும் அதீதமாக அலைந்து திட்டமிடுவது நம்மை மன அமைதியில்லாமல் மனக் குழப்பம் கொள்ளச் செய்கிறது. சீற்றம் கொண்ட யோசனையினால் நடக்கப் போவது திறனுள்ளதாக ஆகப் போவதில்லை. அதற்கு பதிலாக, நாம் சரியான மனப்பாங்குடன், சரியாகச் செயல்பட வேண்டும். பிறகு விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து, நடப்பதை நடக்க விட வேண்டும். இப்படி செய்தால் நமக்கு அதிக சந்தோஷம் கிடைக்கும்.
எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்
எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் எல்லாம் நமது நோக்கப் பாங்கில் தான் உள்ளது…அது நரகத்தையும் சொர்க்கமாக மாற்றக்கூடும். ஒரு முகத்தைப் பார்க்கிறீர்கள்…அதன் நிறத்தாலோ, இனத்தாலோ, முக அம்சங்களாலோ உங்களுக்கு அது பிடிக்கவில்லை…நீங்கள் ஏற்கனவே அதைப் பற்றி ஒரு பக்கச்சார்பான அபிப்ராயம் அமைத்திருக்கிறீர்கள். ஆனால், திறந்த மனதுடன் மீண்டும் ஒரு முறைப் பாருங்கள். அது உங்கள் கருத்துப்படி உள்ள அழகை விட வித்தியாசமாக இருந்தாலும், உங்களது முக அம்சங்களை விட வேறுபட்டு இருந்தாலும், அதற்கு அதன் சொந்த, தனிப்பட்ட […]
உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந...
உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும் நீங்கள் ஒரு வேலையில் ஈடுபடும்போது, உங்களது சிறந்த திறனுடன், ஒரே தடத்தில், ஒருமுக நோக்குடன், முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்துங்கள். அந்த வேலை பெரியதாக கருதப்படுகிறதா அல்லது அற்பமாக கருதப்படுகிறாதா என்பது முக்கியமில்லை. வேலையை சிறந்த முறையில் செய்வதன் மேல் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு உண்மையான சந்தோஷமும், நிறைவான உணர்வும், திருப்தியும் ஏற்படும். விளைவுகளைப் பற்றி நினைக்காதீர்கள்; ஏனெனில், உங்களது முழு […]