கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி உலகில் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதைப் போல பலவித கோபங்களும் உள்ளன. ஆனால், தமக்குக் கோபம் வருவதை உணர்ந்துக் கொண்டு, அது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்கிறது என்பதையும் உணர்ந்துக் கொண்டு, அந்த கோபத்தை எப்படி தணிப்பது அல்லது கட்டுப் படுத்துவது என்று அறிந்துக் கொள்ள விரும்புபவர்களுக்காகத் தான் நான் இதை அளிக்கிறேன். உங்கள் கோபத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? சாதாரணமாக சொல்லப் போனால், நமக்குப் பிடிக்காதது […]
Posts in category சுய முன்னேற்றம்
வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும்
வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும் உடல் வாகனம். மனம் வாகனத்தைச் செலுத்துபவர். வாகனத்தின் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, ஓட்டுனரை கவனிக்காமல் இருப்பது போதுமானதில்லை. உண்மையில், ஓட்டுனருக்கு குறைபாடு இருந்தால், அது வாகனத்தை ஓட்டுவதைக் கூட பாதிக்கக்கூடும்; இருவருக்கும் தீங்கு இழைக்கக் கூடும். அதே போல், உடல் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, மன நலனை அசட்டை செய்வது தான் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளும், கேடுகளும் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம்.
உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் பட...
உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் படுங்கள் குழந்தைகள் தமது பெற்றோர் தங்களைப் பற்றி பெருமைப் பட வேண்டும் என்று மிகவும் ஏங்குகின்றனர். அவர்களுக்கு கருணை காட்டி அவர்களது சுய தன்மையிலேயே அவர்களைப் பற்றி பெருமைப் படுங்கள். அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதனால் உங்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இது உங்கள் குழந்தையை மிக விலை உயர்ந்ததாகக் கருதச் செய்யும். நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத்...
இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும் சில பழமொழிகள், சில சான்றோரின் சொற்கள், சில பழைய விதமான கருத்துக்கள் – இவை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், மற்ற சில கருத்துக்கள் இப்போது நாம் வாழும் காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன. பழைய கருத்துக்கள் ஒருவேளை சில சமயம் உதவலாம். ஆனால், நமது இயல்பறிவை உபயோகித்து கூர்ந்து சிந்தித்து முடிவு செய்வது எந்த காலத்திலும் மேம்பட்ட நலனைத் தரும். இயல்பறிவை உபயோகித்தால், அதிசயமான […]
பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்...
பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும் பல்வகைமைக்கு நடுவில் அமைதியான வாழ்க்கை நடத்துவது எளிதில்லை. ஆனால் பல்வகைமை இல்லாவிட்டால், வாழ்க்கை எவ்வளவு மந்தமாகவும் சலிப்பாகவும் இருக்கும் என்று சிறிது யோசனை செய்யுங்கள். பல்வகைமையை ஏற்றுக் கொள்வோம், எரிச்சல்களைக் கடந்துச் செல்வோம், ஒருவேளை அதை விரும்பவும் செய்வோம்.
நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல...
நன்கொடை அல்லது அன்பளிப்பை நிபந்தனை இல்லாமல் கொடுக்க வேண்டும் நாம் ஒரு பரிசு அல்லது அன்பளிப்பை ஒருவருக்கு கொடுப்பதற்கு முன், பிறகு அந்த பரிசின் மேலும், அது எப்படி உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்பதன் மேலும், நமக்கு ஒரு உரிமையும் இருக்காது என்று தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நாம் விரும்பும் விதத்தில் அதை உபயோகப்படுத்தாமல் போகலாம். மேலும் அவர்கள் அதை தாம் விரும்பும் இன்னொருவருக்குக் கொடுக்கவும் செய்யலாம். நாம் பரிசை அவர்களுக்கு நிபந்தனையின்றி கொடுக்க வேண்டும். […]
குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்
குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள் சில சமயம் நாம் நமது குழந்தைகளிடம் ஏமாற்றம் அடைகிறோம். ஏனெனில் அவர்கள் நம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் – அதிக உற்சாகத்துடன், உலகப்பற்றுடன், ஆன்மீகமாக, அல்லது வேறு ஏதாவது ஒரு விதம். அதற்கு மாறாக, அவர்களை நாம் உடல்நலத்திலும் மனநலத்திலும் நல்லபடியாக வளர உதவலாமே தவிர, அவர்களை கடவுள் அல்லது இயற்கையின் ஆக்ஞையின் படி உள்ள தங்களது குறிக்கோளை நிறைவேற்ற வந்திருக்கும் தனி நபர்களாக வளர விடுவது தான் […]
எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...
எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன. எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது. பொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி! உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் […]