2.1 பரிபூரணானந்தம்
2.1 பரிபூரணானந்தம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 1 வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன மனோவாயு நிற்கும்வண்ணம் வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு மார்கத்தின் இச்சைபோல நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த நினைவையும் மறந்தபோது நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ நெஞ்சந் துடித்தயகுவேன் பேசாத...