திறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள்
திறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள்
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த எளிதான வழிகள்
செயல் திறமை அல்லது ஆக்க வளமிக்க செயல்படுவது என்பதன் பொருள் என்ன?
செயல் திறமை அல்லது ஆக்க வளம் என்பதன் பல பொருள்கள் பின்வருமாறு :
பயனுள்ள, ஆக்கப்பூர்வமான, லாபகரமான, பலனளிக்கும், ஆதாயமுள்ள, மதிப்புமிக்க, செயல் விளைவுள்ள, ஆற்றல் வாய்ந்த, திறம்பட்ட, தகுதிவாய்ந்த, உதவியான.
மேலும் பொருள்கள் :
விருத்தியுள்ள, புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் திறனுள்ள, ஆக்கத்திறன் கொண்ட, சுறுசுறுப்பான, துடிப்பான, ஆற்றலுள்ள.
திறமையுடன் செயல்படுவது என்றால், செயல்களை ஆற்றலுடன், சரியான சமயத்தில், மிகவும் குறைவான மன சஞ்சலத்துடன் செய்து முடிப்பதாகும். இதன் குறிக்கோள் உங்கள் வாழ்க்கையை அமைதியுடனும், சந்தோஷமாகவும் கடத்துவது தான்.
செயல் திறமையை மேம்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஆனால், நாம் திறனுடனும் ஆற்றலுடனும் லாபகரமாக செயல்பட உதவுவதற்கு இங்கு 5 எளிதான வழிமுறைகள் வழங்குகிறேன்.
1. ஒரு பட்டியல் உண்டாக்குங்கள் (Make a List)
செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் எல்லாவற்றையும் கொண்டு ஒரு பட்டியல் ஏற்படுத்துங்கள். ஒழுங்குபடுத்துங்கள்.
இந்த பட்டியலில், நீங்கள் செய்ய விரும்புவதும், ஆனால் சற்று தள்ளிப்போட முடிந்ததாகவும் இருக்கும் செயல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பட்டியலில், உங்களது ஆரோக்கியமான நடவடிக்கைகள், அதாவது தரமுள்ள உணவு உண்பது, உடற்பயிற்சி, மனதிற்கினிய பொழுதுபோக்குகள், இவைகளையும் சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.
2. முக்கிய வரிசைப்படுத்துங்கள் (Prioritize)
உங்கள் பட்டியலை, முக்கியத்துவத்தின்படியும், காலவரையறையின்படியும் வரிசைப்படுத்துங்கள். ஒழுங்குபடுத்துங்கள். (Organize)
பட்டியலில், உங்கள் சொந்த நலனுக்காக, உங்கள் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் நடவடிக்கைகளுக்கும் நேரம் அனுமதிக்க மறக்காதீர்கள்.
உங்களுக்கு குடும்பம் இருந்தால், அல்லது அன்பார்ந்தவர் இருந்தால், அவர்களுக்காக, அவர்களுடன் நேரம் செலுத்தவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும், அவர்களை பாராட்டுவதற்காகவும், உங்கள் பட்டியலில் இடமளியுங்கள்.
3. காரியங்களைத் தள்ளிப் போடாதீர்கள் (Don’t Procrastinate)
ஒரு முக்கிய காரணமும் இல்லாமல் செயல்களைத் தள்ளி வைத்தல், அல்லது ஒத்திப்போடுதல், உங்கள் செயல் திறனுக்கு எந்த விதத்திலும் உதவாது.
காரியங்களை தள்ளிப்போடுதல் ஒரு கெட்ட வழக்கம். உங்களுக்கு ஒரு பிரச்சனையோ அல்லது பணியோ இருந்தால், அதில் விரைந்து பாய்ந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதை நீங்கள் அநாவசியமாக ஒத்திப் போடவும் கூடாது.
எந்த காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமோ அதை சரியான சமயத்தில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து முடியுங்கள். தள்ளிவைத்துக் கொண்டே இருக்காதீர்கள்.
உங்களது பணிகளுக்கு நினைவூட்டுக் குறிப்புகள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது நாட்காட்டி (calendar), மின்னஞ்சல் (email), தொலைபேசி (phone), இவைகளின் மூலம் நினைவூட்டுக் குறிப்புகள் ஏற்படுத்தி, அதன்படி செயலாற்றுங்கள்.
நீங்கள் காரணமின்றி, அநாவசியமாக காரியங்களைத் தள்ளிப்போடும்போது, அவை அகன்று விலகிப் போவதில்லை. அவை எல்லாம் சேர்ந்துக் கொண்டு, பிற்காலத்தில் ஒரு பெரும் சுமையாக ஆகி விடுகிறது. எனவே, செய்ய வேண்டியதை அந்தந்த சமயத்தில் செய்து விடுங்கள்.
4. காரியத்திற்காக தயார் செய்துக் கொள்ளுங்கள் (Prepare for the task)
உங்கள் பணிக்காக என்ன தேவையோ, அவை எல்லாம் இருக்கிறதா என்று உறுதி செய்துக்கொள்ளுங்கள். காரியத்தின் எல்லா அம்சங்களிலும் தயார் செய்துக் கொள்ளுங்கள். ஒழுங்குபடுத்துங்கள். (Organize).
காரியத்தின் நிகழ்முறையை யோசித்துப் பாருங்கள். அதற்கு சுமார் எவ்வளவு நேரம் பிடிக்கும், எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும், மற்ற விஷயங்கள், இவற்றைப் பற்றி சிந்தித்து, அதற்காக தேவைப்படும் பொருட்களையெல்லாம் உடன் எடுத்துச் செல்லுங்கள். தயார் செய்யுங்கள்.
5. பின்தொடர் நடவடிக்கை எடுத்துக் கொண்டு காரியத்தை முடியுங்கள் (Follow up and Finish it)
உங்கள் காரியத்தை நீங்கள் ஆரம்பித்து வைத்திருக்கலாம். ஆனால், அவை நிலுவையில், முடிவு பெறாத நிலையில் இருக்கலாம். இந்த நிலையில் இருப்பதாக இவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
முடிவுறாத நிலையில் உள்ள காரியங்கள் மீது பின்தொடர் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு விதத்தில் அவை முடிவு பெறுவதை உறுதிப் படுத்துங்கள். அவற்றை தொங்கிக் கொண்டு இருக்க விடாதீர்கள்.
முடிவுறாத நிலையில் உள்ள பணிகளுக்கு நினைவூட்டுக் குறிப்புகள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது நாட்காட்டி (calendar), மின்னஞ்சல் (email), தொலைபேசி (phone), இவைகளின் மூலம் நினைவூட்டுக் குறிப்புகள் ஏற்படுத்தி, அதன்படி செயலாற்றி, காரியத்தை முடித்து விடுங்கள்.
சுருக்கத் தொகுப்பு (Summary) : ஒழுங்குபடுத்துங்கள் (Organize)
1. ஒரு பட்டியல் உண்டாக்குங்கள் (Make a List)
2. முக்கிய வரிசைப்படுத்துங்கள் (Prioritize)
3. காரியங்களைத் தள்ளிப் போடாதீர்கள் (Don’t Procrastinate)
4. காரியத்திற்காக தயார் செய்துக் கொள்ளுங்கள் (Prepare for the task)
5. பின்தொடர் நடவடிக்கை எடுத்துக் கொண்டு காரியத்தை முடியுங்கள் (Follow up and Finish it)
இவை திறமையாக செயல்படுவது எப்படி என்பது பற்றி – 5 முக்கியமான விஷயங்கள்
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த எளிதான வழிகள்










Ramana Maharshi – Tamil
Ramana Maharshi – English
Guidance Of Supreme Gurus
Meditation Is Life
Great Recipes Website
My Podcasts