1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
1.3 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
தாயுமானவர் திருப்பாடல்கள்
பாடல் 1 – வரிசை 3
அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை
அருமறைகள் முரசறையவே
அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான
ஆதியை அநாதியேக
தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச்
சாலம்ப ரகிதமான
சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப
சாந்தபத வ்யோமநிலையை
நிர்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ்சப்பொருளை
நிர்விஷய சுத்தமான
நிர்வி காரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்
நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
திவ்யதே சோமயத்தைச்
சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
தேவதையை அஞ்சலிசெய்வாம். 3.
பொருள் :
இரண்டாவது இல்லாதது,
தனித்துவமான ஒளியான மூலாதாரச் சொல்லாக உள்ளது,
மறை நூல்கள் பறை சாற்றுவது,
ஞானத்தின் ஞானம், எங்கும் நிரம்பும் பேரானந்தம்,
முதலாவதான மூலாதாரம்,
சொரூப ஆன்மாவின் வடிவம்,
எல்லா மதங்களும் வாதிடுவது,
ஆதாரத்திற்காக நாடப்படுவது,
நிலையான நிரந்தரமானது,
பூரணமானது,
ஆதாரமின்றி உள்ளது,
நமது ஆதாரமானது,
சாந்தமானது,
வெறுமையானது,
எப்போதும் உள்ளது, தூய்மையானது,
பிரபஞ்சத்தின் பொருள் சார்ந்த தன்மையால் பாதிக்காதது,
நிகழ்வுகளால் பாதிக்கப்படாதது,
மாறாதது, எதிலும் சம்பந்தமில்லாத நடுநிலையானது, களங்கமற்றது, உருவமற்றது,
எண்ணத்தில் உள்ளது ஆனால் எண்ணத்தால் அறியப்படாதது,
தெய்வீக ஒளி பிரகாசமானது, உண்டாக்கப்படாதது, ஞான வெளியில் விளங்குவது,
அந்த மேன்மை மிகுந்த உச்ச உயர்வான கடவுளை
நாம் பணிவுடன் வழிபடுவோம்.
பொருள் : வசுந்தரா










Ramana Maharshi – Tamil
Ramana Maharshi – English
Guidance Of Supreme Gurus
Meditation Is Life
Great Recipes Website
My Podcasts