விவேகானந்தர் மேற்கோள் 3
விவேகானந்தர் மேற்கோள் 3
விவேகானந்தரின் முழு படைப்புகள் – தொகுதி 2

நமது மிகவும் அதிகமான துயரம் இது தான் : நாம் ஒரு காரியத்தை எடுத்துக் கொள்கிறோம், நமது முழு சக்தியையும் அதன் மேல் செலுத்துகிறோம். ஆனால் அது ஒருவேளை தோல்வி அடைகிறது. பிறகும் நம்மால் அதை விட முடிவதில்லை. அது நமக்கு இன்னல் அளிக்கிறது என்றும், அதை மேலும் பற்றிக் கொண்டிருந்தால் அது துயரம் தான் அளிக்கும் என்றும் நமக்குத் தெரியும். ஆனாலும் நம்மால் அதை விட்டு விலக முடிவதில்லை. தேனி தேனைப் பருக வந்தது; ஆனால் அதன் கால்கள் தேன் கிண்ணத்தில் ஒட்டிக் கொண்டதால், அதனால் அகல முடியவில்லை. இது தான் நமது துன்பத்தின் ஒரு காரணம் : நமக்கு அதிகப் பற்றுதல் இருக்கிறது; நாம் பிடிபட்டு விட்டோம். எனவே தான் கீதை சொல்கிறது : “எப்போதும் செயல்படு, ஆனால் எதிலும் அதிகப் பற்றுதல் கொள்ளாதே; பிடிபட்டுக் கொள்ள விடாதே.”










Ramana Maharshi – Tamil
Ramana Maharshi – English
Guidance Of Supreme Gurus
Meditation Is Life
Great Recipes Website
My Podcasts