கடவுளின் நினைவு, கடவுளின் மீது தியானம், கடவுள் மீது நம்பிக்கை
உற்சாகம் தரும் கருத்துக்கள்
இந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.
சில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.
வெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.
நமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.