ஒருவரின் குணங்களை நீங்கள் விரும்புவது போல் எதிர்பார்க்க வேண்டாம் ஒருவரின் நல்ல தன்மைகளை உள்ளபடியே பாராட்டுவது விவேகம். நீங்கள் நேசிக்கும், அல்லது நேசிக்க விரும்பும் ஒருவரிடம், நீங்கள் விரும்பும் குணங்களைக் காண எதிர்பார்க்க வேண்டாம். அவர்களிடமே உள்ள நல்ல, நேயமான தன்மைகளைக் கண்டு பாராட்டுங்கள். பிறகு அவர்கள் எவ்வளவு இனிய, நேர்த்தியான, அன்பான, உபயோகமான நபர் என்பது உங்களுக்கு தெரிய வரும். அதன் பிறகு தான் அவர்களிடம் நீங்கள் நெருங்கிப் பழகி உண்மையாக சந்தோஷம் அடைய […]
Posts in category ஊக்கம்
வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான்...
வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும் ஒரு வேலையை மிகவும் சிறந்த முறையில் செய்யும்போது கிடைக்கும் திருப்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது. அதன் பொருள், நமது திறன்களுக்குத் தகுந்தவாறு நம்மால் முடிந்த வரையில், முதலிலிருந்து கடைசி வரையிலும் வேலையை சிறந்த முறையில் செய்து முடிப்பதாகும். அது தான் வேலையின் வெற்றி. அது தான் உண்மையான சந்தோஷம்.
ஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்ய வேண்ட...
ஒரு செயலை சந்தோஷத்திற்காக செய்யுங்கள் எதாவது ஒரு விதத்தில் அது உங்களுக்கு சந்தோஷம் தருகிறது என்பதற்காக மட்டுமே ஒரு செயலைச் செய்யுங்கள். ஆனால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேராமல்செய்யுங்கள். மற்ற காரணங்கள் எல்லாம் போலியானவை; அவை உங்களை உபயோகமில்லாத நடவடிக்கைகள் கொண்ட ஒரு முடிவில்லாத புதிர்பாதையில் மாட்டிக்கொள்ள விட்டு விடும்.
ஓரு பெண்ணின் முழு நிறைவான வாழ்க்கை
ஓரு பெண்ணின் நிறைவான வாழ்க்கை ஒரு பெண் முழு நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவள் ஒரு மனைவி, அல்லது ஒரு அன்னை, மற்றும் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவள் ஒரு கணவனை ஏற்றுக் கொள்ளவோ, குழந்தைகளைப் பெறவோ அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கிடையில் குடும்ப வாழ்வில் ஈடுபடவோ “விரும்பி” தேர்ந்தெடுத்தால், அது நல்லது தான். ஆனால், அவள் தன்னை ஒரு முழு நிறைவான நபராக உணருவதற்கு, இப்படிப்பட்ட ஏதாவது ஒரு குறிப்பிட்ட […]
உலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார...
உலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகத்தில் எவ்வளவு நல்லவர்கள், கருணையுள்ளவர்கள் இருக்கிறார்கள்! சில சமயங்களில் சிலர் இரக்கமில்லாத, தீயவர்களாகத் தோன்றலாம். ஆனால், பெரும்பாலானவர்கள், தங்கள் வழியை விட்டு கூட, முற்றிலும் அந்நியர்களாக இருந்தால் கூட, மற்றவர்களுக்கு, சிறிதோ, பெரிதோ, தேவைப்படும் உதவியை அளிக்கும் எவ்வளவு அன்பான, தயவுள்ள, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது..மனதைத் தொடுகிறது. ஆமாம். நாம் செய்வதற்கு நல்ல, நேர்மறையான செயல்கள் நிறைய இருக்கின்றன.
குழந்தைகள் பெற்றோர் அல்லது பொறுப்பாளர...
குழந்தைகள் பெற்றோர் அல்லது பொறுப்பாளரை நம்பி பின்பற்றுகின்றனர் நம் குழந்தைகளின் முன்னால் ஒரு மனிதரைத் துச்சமாக நடத்தினால், சிறுமி ஆண்களை வெறுத்தவாறு வளரலாம், சிறுவன் சுய மரியாதையின்றி தன்னையே வெறுத்தவாறு வளரலாம். நம் குழந்தைகளின் முன்னால் ஒரு பெண்ணைத் துச்சமாக நடத்தினால், சிறுவன் பெண்களை வெறுத்தவாறு வளரலாம், சிறுமி சுய மரியாதையின்றி தன்னையே வெறுத்தவாறு வளரலாம். ஆனால், பெண்களும் ஆண்களும், நமது குழந்தைகளின் முன்னால், ஒருவரை ஒருவர் பாராட்டி, குறைகளை மன்னித்து, அன்புடனும் கருணையுடனும் நடந்துக் கொள்ள […]
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்ப...
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய பலர் அப்படி செய்யாததற்குக் காரணம் தானத்தைப் பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளதாலும், மற்றோருக்கு தாராளமாகக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறியாததாலும், குடும்பத்தின் வழக்கப்படி நடப்பதாலும் இருக்கலாம் […]