எல்லோருக்கும் சமமான கண்டிப்பு இரண்டு பணியாளர்கள் பணி முதல்வரிடம் சம்பள உயர்வு கேட்க வருகின்றனர். பணி முதல்வர் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். ‘நீ எப்பவும் எதைப் பத்தியாவது குறை சொல்றே! நீ என்ன, எல்லாம் ரொம்ப சுலபம், கஷ்டப்பட்டு வேலை செய்யாமலே எல்லாம் கிடைக்கும்னு நினைக்கிறயா?” பணியாளர் 1: என்னப்பா, அவர் ரொம்ப கோவமா இருக்கார் போலிருக்கே! பணியாளர் 2: இல்லை, இல்லை! அவர் ஒருவேளை சோம்பேறியான ஒரு பணியாளர் கிட்ட ரொம்ப கண்டிப்பா இருக்கலாம். […]
Posts in category ஹாஸ்யம் – தமாஷ்
மூளையை உபயோகிப்பதா, இழப்பதா
மூளையை உபயோகிப்பதா, இழப்பதா அதிக புத்திசாலியில்லாத ஒரு பெண் தனது சிநேகிதியிடம் சொல்கிறாள். பெண் : எனது பழைய சிநேகிதி ரமா வரப்போகிறாள்! நான் முன்பு சொன்னது உனக்கு ஞாபகமிருக்கிறதா…பள்ளியில் ஒரு பெண் எல்லாவற்றிலும் தோல்வி அடைபவள், பிரகாசமான எதிர்காலம் கிடையாது என்று… சிநேகிதி: ஓ! ரமா தான் அந்தப் பெண்ணா? பெண்: இல்லை, இல்லை, அது நான்! ரமா மிகவும் புத்திசாலியான, அறிவாளி! அவள் தான் என்னிடம் சொன்னாள், எனக்குத் தேர்ந்தெடுக்க இரண்டு […]
நியாயமற்ற கடன் மறுப்பு
நியாயமற்ற கடன் மறுப்பு பெண் 1: நான் கடன் கேட்டு பல வங்கிகளுக்குச் சென்றேன். என்னிடம் பல மிகச்சிறந்த சான்றாதாரங்கள் இருந்த போதும், அவர்கள் எல்லோரும் கடன் கொடுக்க மறுத்து விட்டார்கள். பெண் 2: எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மறுத்தார்கள்? பெண் 1: ஏனெனில் அவர்கள் சான்றாதாரங்களை பற்றி விசாரித்து அறிந்து விட்டார்கள்!!
குகைவாசிகள் கால்பந்து
குகைவாசிகள் கால்பந்து பெண் 1: கால்பந்து விளையாட்டு தொலைகாட்சியில் காண்பிப்பதற்கு முன்னால், மனிதர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்? பெண் 2: அவர்கள் விளையாட்டுகளின் ஒலிபரப்பை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பெண் 1: வானொலிக்கு முன்னால் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்? பெண் 2: அவர்கள் குகைகளின் சுவர்களின் மேல் கால்பந்து விளையாட்டின் சித்திரங்களை வரைந்துக் கொண்டிருந்தார்கள்!
சில உறவினரால் வரும் சந்தோஷம்
சில உறவினரால் வரும் சந்தோஷம் இரண்டு நண்பர்கள் விமான நிலையத்தில் சந்திக்கிறார்கள். முதல் நண்பர் மிகுந்த மகிழ்ச்சியால் களிப்புற்றிருக்கிறார். இரண்டாவது நண்பர்: நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே! என்ன விஷயம்? முதல் நண்பர்: என்னுடைய உறவினர்கள் தான்! அதனால் தான் சந்தோஷம்! இரண்டாவது நண்பர்: ஓ அப்படியா! என்ன, அவங்க வரப் போறாங்களா? முதல் நண்பர்: இல்லை!! அவங்க இப்போ தான் போனாங்க!
பரிசோதனைச் செலவு நஷ்டம்
பரிசோதனைச் செலவு நஷ்டம் ஒருவர் மருத்துவரிடம் உடல் நல பரிசோதனக்காக செல்கிறார். திரும்பி வந்ததும் மிகவும் வருத்தமாகக் காண்கிறார். மனைவி: ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? அவர்கள் என்ன சொன்னார்கள்? கணவர்: எவ்வளவு பணம் செலவழித்து பரிசோதனைகள் செய்துக் கொண்டேன்! ஆனால் எனக்கு ஒரு வியாதியும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்!