1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் தாயுமானவர் திருப்பாடல்கள் பாடல் 1 – வரிசை 1 [பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்] அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் என்றைக்கு முள்ள தெதுஅது கங்குல்பக லறநின்ற […]
Posts in category நடைமுறை மெய்யறிவு
நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டு...
நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும் முதலாவதாக, ஆழ்நிலை தியானம் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும் என்பதற்காகத் தான் அதைச் செய்வதில் ஈடுபடுகிறோம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆசைகள் நிறைவேறுவதாலும், உணர்ச்சி பிரவாக கிளர்ச்சிகளாலும் ஒரு வித சந்தோஷம் கிடைப்பது போல தோன்றினாலும், அவை நீடித்து நிலைத்து இருப்பதில்லை. மேலும், அவை பிற்காலத்தில் இன்னல்கள் கூட அளிக்கலாம். அல்லது அந்த மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் கடந்த பிறகு உணர்ச்சிகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டு […]
ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்
ஆழ்நிலை தியானத்தின் பலன்கள் சந்தோஷம் உண்மை என்னவென்றால், நமது எண்ணங்கள் செயல்கள் எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் : நமது சந்தோஷம். நாம் அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாக இருக்க விரும்புகிறோம். யாரும் துயரத்துடன் அமைதியற்று இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. நமது பிரச்சனை என்னவென்றால், நாம் சந்தோஷத்தை தவறான, பகுத்தறிவற்ற வழிகளில் தேடுகிறோம். அவை சந்தோஷம் அளிக்கும் என்று எண்ணி, நாம் பலவித செயல்களிலும் பாதைகளில் ஈடுபடுகிறோம். ஆனால், அவை நமது மனதில் அதிக சுமையையும், […]
விவேகானந்தர் மேற்கோள் 2
விவேகானந்தர் மேற்கோள் 2 செயல்களின் ரகசியம் எப்போது தோல்வி வந்தாலும், அதை நாம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், 99 சதவீதம் நிகழ்வுகளில், வழிமுறைகளின் மீது நாம் சரியான கவனம் செலுத்தாதது தான் தோல்விக்கு காரணம் என்று நாம் கண்டு கொள்வோம். வழிமுறைகளை சரியாக முடிப்பதற்கும், பின் அதை வலிமையாக்குவதற்கும் கவனம் செலுத்துவது தான் நமக்குத் தேவை.
விவேகானந்தர் மேற்கோள் 1
விவேகானந்தர் மேற்கோள் 1 மதங்களின் உலகப் பாராளுமன்றம், ஷிகாகோ, செப்டம்பர் 11, 1893 வெவ்வேறு இடங்களில் மூலங்களைக் கொண்ட வெவ்வேறு ஓடைகள் எல்லாம் கடலில் ஒன்று சேருவது போல், பகவானே, மனிதர்கள், பல விதமாகத் தோன்றினாலும், அவர்கள் வெவ்வேறு மனப்போக்குகளால் எடுத்துக் கொள்ளும் பலவித பாதைகள் எல்லாம், நேராக இருந்தாலும், கோணலாக இருந்தாலும், உங்களிடமே வந்து சேர வழிகாட்டுகின்றன.
இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை
இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை எல்லா பெரும் மதங்களிலும் நல்லது உள்ளது. எனக்கு இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை முதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது. ஆனால் “இந்து மதம்” என்று பொதுவில் வழங்கி வருவதால் அந்த சொற்றொடரை இங்கு உபயோகிக்கிறேன். இந்து மதம் இந்தியாவின் பல சம்பிரதாயங்கள், கலாச்சாரங்களின் கலந்திணைப்பு. அது காலந்தோரும், குரு-சீடர் என்னும் பாரம்பரியத்தில், […]