அழகிய தோற்றம்! நீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள்! பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான்! உண்மை என்னவெனில், எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பிறப்பதில்லை. நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உட்புறத்திலும் வெளிப்புறத்திலும், உடல், மனம் – இவற்றின் […]
Posts in category சுய முன்னேற்றம்
தன்னம்பிக்கையும் ஆணவமும்
தன்னம்பிக்கையும் ஆணவமும் தன்னம்பிக்கைக்கும் ஆணவத்திற்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. ஒருவருக்கு தன்னம்பிக்கை உள்ள போது, அவர் தன்னைப் பற்றியும் தனது திறன்களைப் பற்றியும் மிகவும் நம்பிக்கைக் கொண்டு, தான் செய்ய நினைக்கும் செயலுக்கு தனக்கு மிக்க திறமை உள்ளது என்று நம்புகிறார். தனது முன்னேற்றத்திற்காக நேர்மறையாகச் செயல்படுகிறார். ஒருவருக்கு ஆணவம் உள்ள போது, தான் மட்டுமே தான் மிக முக்கியமானவர், தனக்கு மட்டுமே தான் திறன்கள் உள்ளன, மற்றவர்களெல்லாம் தனக்கு […]
மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழி...
மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் வாழ்வில் பெரும்பாலான சமயங்களில், சாதாரணமான நடவடிக்கைகள் மிகவும் அதிக பலன்கள் தருகின்றன. இதை எல்லாம், அல்லது சிலவற்றையாவது, சிறிதளவு தினமும் செய்ய வேண்டும். உங்கள் மனதில் புத்துணர்ச்சி தோன்றவும், அமைதியாகவும், மன சாந்தியுடனும் இருக்கவும் இவை உங்களுக்கு மிகவும் உதவும். 1. உடற்பயிற்சி. நடத்தல், ஓடுதல், நீந்துதல் போன்ற இதயத்திற்கு நன்மை தரும் பயிற்சிகள் செய்ய வேண்டும். கடற்கரை, நந்தவனம், பூங்கா, அமைதியான வீதிகள், இத்தகைய இடங்களில் நடப்பது மிகவும் […]
செருக்கு என்பது அறிவு இல்லை
செருக்கு என்பது அறிவு இல்லை மக்கள் பொதுவாக, ஒருவர் மிகவும் செருக்குடனும், தான் வலிமையுள்ளவர், உயர்ந்தவர் என்ற நினைப்புடனும் நடந்துக்கொண்டால், அவர் மிகவும் அறிவாளி என்று நினைக்கின்றனர். ஆனால், ஒருவர் நயமாக, இனிமையாக நடந்துக் கொண்டால், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கின்றனர். இவை தவறான கருத்துக்கள். அறிவு வலிமையாகும் என்பது உண்மைதான். ஆனால், வலிமை அல்லது செருக்கு அறிவாகாது.
மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்
மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் அடிக்கடி நம் கருத்துக்களை மற்றவரின் மீது திணிப்பது ஒரு கெட்ட வழக்கம்; குறிப்பாக அவர்களது தோற்றத்தைப் பற்றி. ஏதாவது ஒரு ஆலோசனை சொல்ல நாம் விரும்பினால், நாம் அதைக் கனிவாக சொல்ல வேண்டும்; மேலும் முடிவை அவர்களிடம் விட்டு விட வேண்டும். இது இருவருக்கும் எளிதாக அமையும், பதற்றத்தைக் குறைக்கும், உறவை முன்னேற்றவும் செய்யும்.
சினத்தை தணிப்பது நல்லது
சினத்தை தணிப்பது நல்லது நமக்குப் பிடிக்காதது ஏதாவது நிகழ்ந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒருவர் ஒரு செயல் செய்யாததாலோ அல்லது தவறாக செய்ததாலோ ஏற்பட்ட தொல்லைக்காக அவரைக் குறை கூறுகிறோம். நமது சினத்தை நாம் யோசிக்காமல் சிதறியடிக்கும்போது, ஒரு நெருக்கடி நிலையும், சச்சரவும் ஏற்படுகிறது. இந்த சினத்தைத் தணித்துக்கொண்டு, சுட்டிக்காட்டாமல், அமைதியாக இடரை தெரிவித்து, தீர்வையும் அறிவுறுத்தினால், நல்ல பலன் கிடைக்கக் கூடும். மற்றவருடன் நமது உறவும் மேன்மைப் படும். சினத்தைக் கொஞ்சம் […]
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்!” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில சமயம் அவர் விருப்பப்படி செய்ய விடுவதும் சகிப்புத்தன்மை தான்.
தியானம் உங்கள் நலனுக்கு நல்லது
தியானம் உங்கள் நலனுக்கு நல்லது ஆழ்நிலை தியானம் என்பது ஒரு தெய்வீகமான அல்லது அமைதியான உருவம், பெயர் அல்லது கருத்தின் மேல் மனதைப் பதிய வைப்பது தான். அது உலக விஷயங்களில் கூட கவனமையம், ஒருமுகச் சிந்தனை, தெளிவு முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும். அது, மனதை பலவீனமாக்கும் சிதறியுள்ள எண்ணங்களை குறைத்து, மனதை ஒருமுனையாகவும் வலிமையாகவும் ஆக்கும்.