மற்றவரின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது பலவீனமா மன வலிமையா?
மற்றவரின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது பலவீனமா மன வலிமையா?
மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது மனதின் பலவீனத்திற்கு அறிகுறியா, அல்லது அது மன வலிமையின் அறிகுறியா?
மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான். ஆனால், விருப்பத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால், அது சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும்.
நமக்கு முன்னால் மற்றவரின் சுகத்தை வைப்பதும், வேறொருவரின் மகிழ்ச்சிக்காக நமது ஆசையை துறப்பதும் பலவீனத்தின் குறிப்பில்லை.
அது உண்மையில், சுய திருப்தியும், மன வலிமையும், மற்றவருடன் உறவை மேம்பட வைக்கும் ஆர்வமும் இருப்பதைக் காட்டுகிறது.
முதலாவதாக, “மற்றவர்கள்” என்று இங்கு நான் சொல்லும் போது, உங்களது அன்புக்குரியவர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அல்லது பொதுவாக உங்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்கள் அல்லதி நீங்கள் அக்கறை கொள்ளும் நல்ல, அன்பான மனிதர்கள், இவர்களைத் தான் நான் இந்த விஷயத்தில் “மற்றவர்கள்” என்று குறிப்பிடுகிறேன்.
நீங்களே விரும்பி மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதைப் பற்றி சில உதாரணங்கள் தருகிறேன். நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட உணவை விரும்பலாம். ஆனால் உங்கள் அன்புக்குரியவர் வேறொரு உணவை விரும்பலாம். அல்லது நீங்கள் மிகுந்த காரமான உணவைத் தேர்ந்தெடுக்கும் போது, மற்றவர், “எனக்கு உடல்நிலை சரியில்லை, இன்று கொஞ்சம் காரத்தைக் குறைக்கலாமா?” என்று சொல்லலாம். அல்லது பொழுதைப் போக்க, நீங்கள் ஒரு இடத்துக்கோ நிகழ்ச்சிக்கோ செல்ல முடிவு செய்யலாம், ஆனால் மற்றவர் வேறெங்கோ போக முடிவு செய்யலாம்.
இவையெல்லாம் சாதாரணமான உதாரணங்கள் தான். ஆனால் நமது வாழ்வில் இவை அடிக்கடி நிகழ்கின்றன. பிரச்சனை எதுவானாலும், உங்களுக்கு இரண்டு வழிவகைகள் உள்ளன. ஒன்று, நீங்கள் “நான் நினக்கும் விதத்தில் தான் இதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் எனக்கு இது தான் பிடிக்கிறது” என்று மற்றவரிடம் சொல்லலாம். அல்லது நீங்கள் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து, “சரி, பரவாயில்லை, நீ விரும்புவது போலவே செய்யலாம்” என்று சொல்லலாம்.
உங்களது விருப்பப்படியே எதையும் செய்வது, உங்களை தற்காலிகமாக மிகவும் வலிமை வாய்ந்தவராகவும், திருப்தி உள்ளவராகவும் உணர வைக்கலாம்; ஆனால் மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது உங்களுக்கு நிலையான சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும். மற்றவருக்கு கருணை காட்டியதால் நீங்கள் உங்களைப் பற்றி சந்தோஷம் அடைவீர்கள், உங்களது சுய மதிப்பும் அதிகரிக்கும். மேலும் மற்றவர்களை சந்தோஷப் படுத்தியதால், உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும். அதோடு மட்டுமில்லாமல், உங்களுக்கும் உங்களது அன்புக்குரியவருக்கும் இடையே உள்ள உறவு வலிமை அடையும், மேம்படும்.
உங்களது அன்புக்குரியவர்களுக்கு விட்டுக் கொடுப்பது பலவீனமில்லை; அதற்கு மாறாக அது ஒருவரின் தன் நிறைவுக்கும் மன வலிமைக்கும் அறிகுறியாகும்; மேலும் விட்டுக் கொடுப்பது, அன்புக்குரியவருடன் உள்ள உறவை மேம்படச் செய்ய விரும்புவதன் அறிகுறியுமாகும்.
மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பது ஆன்மீக வளர்ச்சிக்கும் மிகவும் உதவி அளிக்கும். ஒருவருடைய ego என்று சொல்லப்படும் தான்மை அகங்காரம் சுய நலமாக இருக்கச் சொல்லும் போது, அதைத் தடுத்து, மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க விரும்பும்போது, மனம் தூய்மை அடையும், அமைதியாக இருக்கும். இது ஒரு வித ஆழ்ந்த சந்தோஷத்தையும் திருப்தியையும் உண்டாக்கும். ஆன்மீக குறிக்கோள் பூர்த்தி அடைய இத்தகைய தன்னலமில்லாத செயல்கள் வழிகாட்டும்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதில்லை. அதுவும் உங்களுடன் வாழும் அந்த மற்றவர் மிகவும் சுய நலமாக இருந்துக் கொண்டு உங்களது விருப்பங்களுக்கு ஒரு போதும் விட்டுக் கொடுக்காமல் இருந்தால், பின் நீங்கள் உங்கள் நலத்தையும் சற்று மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் கருத்து உங்கள் இருவருக்குமே நல்லதாக அமையலாம். மொத்தத்தில், நீங்கள் விவேகத்துடன் சாமர்த்தியமாக மற்றவர்களின் தன்மைக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும். உங்களது கருணையை தவறாகப் பயன்படுத்தாமல், அவ்வப்போது உங்களுக்கும் விட்டுக் கொடுத்து வாழும் நல்ல மனிதர்களுக்கு நீங்களும் அவ்வப்போது அன்பும் கருணையும் காட்டினால், அது உங்களுக்கும் நன்மை அளிக்கும், அவர்களையும் திருப்திபடுத்தும், அவ்வளவு தான்.
மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான். ஆனால், விருப்பத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால், அது சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும்.
நமக்கு முன்னால் மற்றவரின் சுகத்தை வைப்பதும், வேறொருவரின் மகிழ்ச்சிக்காக நமது ஆசையை துறப்பதும் பலவீனத்தின் குறிப்பில்லை.
அது உண்மையில், சுய திருப்தியும், மன வலிமையும், மற்றவருடன் உறவை மேம்பட வைக்கும் ஆர்வமும் இருப்பதைக் காட்டுகிறது.