நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு
நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு
நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்கள் இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில், பிற்பாடு வரக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து கடவுள் உங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பாகும். இதைப் புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் கடவுளின் அருளும் ஆசியுமாகும் என்று அறிந்துக் கொள்ளுங்கள்.
இது சொல்வதில் எளிதானது, நடைமுறையில் செய்வது மிகவும் கடினம் என்பது உண்மை. ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன், உங்கள் வாழ்க்கையையே தூக்கி எறிந்து விட்டு வருந்துவதற்கு, இந்த நபருக்கு லாயக்கு இருக்கிறதா?
இந்த உறவின் உடைப்பு நீங்கள் செய்த தவறினால் என்று நீங்கள் எண்ணினால், அதனால் மனமுடைந்து வருந்தினால், மீண்டும் ஒரு முறை இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள், நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். இந்த நபர் உங்கள் மீது நிஜமான அன்பு கொண்டிருந்தால், அவர்கள் உங்களை நிராகரித்து விட்டு அகன்றுச் செல்வார்களா?
இன்னொரு விஷயம். நீங்கள் அவர்களைத் திருமணம் செய்துக் கொண்டு, குழந்தைகள் பெற்றுக் கொண்டு, பிறகு அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் என்னவாகும்? அது இன்னும் எவ்வளவு அதிக துயரத்தையும் கலவரத்தையும் உண்டாக்கியிருக்கும்? இப்போதுள்ள நிலையை விட அது இன்னும் மோசமானது இல்லையா? இப்போது உங்கள் தொடர்பும் பிரிவும் முடிவடைந்தது அதை விட மேலானது இல்லையா?
அதனால் தான் நான் சொல்கிறேன், நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு. ஒரு பிரிவு சில சமயம் மாறுவேடத்தில் வரும் கடவுளின் அருளும் உதவியுமாகும். அது இந்த தொடர்பில், பிற்பாடு வரக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து கடவுள் உங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பாகும்.
அதனால், நினவு வைத்துக் கொள்ளுங்கள், நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு. ஒரு பிரிவு சில சமயம் மாறுவேடத்தில் வரும் கடவுளின் அருளும் ஆசியுமாகும். எனவே, ஒரு ஆணுக்காகவோ பெண்ணுக்காகவோ, அழுது, வருந்தி, உங்கள் வாழ்க்கையையே வீணக்கி விடாதீர்கள். உங்களைப் பற்றிய சுய வருத்தத்தில் ஆழ்ந்து போக வேண்டாம். இந்த அனுபவத்திலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு, தைரியமாக வாழ்க்கையை எதிர்கொண்டு முன்னே செல்லுங்கள். தற்போதைய துயர சூழ்நிலையிலேயே தங்கி துன்பப்பட வேண்டாம்.
ஒருவருடன் உறவு முடிந்து போனால், அது இந்த தொடர்பில், பிற்பாடு வரக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து கடவுள் உங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு என்று புரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை நிச்சயமாக முன்னேறும். நீங்கள் இந்த தற்போதைய துயரத்திலிருந்து கட்டாயம் விடுபடுவீர்கள். இது எப்போதும் நடைபெறும் விஷயமாகும். இதை நம்புங்கள்.
மனம் துயரத்தில் ஆழும் போது அது சரியாக சிந்திக்கும் வலிமையை இழந்து விடும். ஆனால், நான் இங்கு அளித்துள்ள அறிவுரைகளைப் பற்றி சிந்தித்து, விவேகத்துடன், துயரத்திலிருந்து விடுபட்டு, உற்சாகத்துடன் வாழுங்கள். உங்களை துயரத்தில் ஆழ்த்தும் ஒரு சாதாரண நபருக்காக நேரத்தையும் சந்தோஷத்தையும் மன அமைதியையும் இழக்க வேண்டாம்.
நீங்கள் இந்த உலகத்தில் இருப்பதற்கு ஒரு தனிப்பட்ட குறிக்கோள் உள்ளது. அந்த குறிக்கோளை நிறைவேற்ற உற்சாகத்துடன் சந்தோஷமாக வாழுங்கள்.
நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு.