குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்
குழந்தைகளை தனிநபர்களாக வளர விடுங்கள்
சில சமயம் நாம் நமது குழந்தைகளிடம் ஏமாற்றம் அடைகிறோம். ஏனெனில் அவர்கள் நம்மைப் போலவே இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் – அதிக உற்சாகத்துடன், உலகப்பற்றுடன், ஆன்மீகமாக, அல்லது வேறு ஏதாவது ஒரு விதம்.
அதற்கு மாறாக, அவர்களை நாம் உடல்நலத்திலும் மனநலத்திலும் நல்லபடியாக வளர உதவலாமே தவிர, அவர்களை கடவுள் அல்லது இயற்கையின் ஆக்ஞையின் படி உள்ள தங்களது குறிக்கோளை நிறைவேற்ற வந்திருக்கும் தனி நபர்களாக வளர விடுவது தான் நல்லது என்பதை உணர்ந்தால், நாம் அவர்களைப் பற்றி எப்போதும் சந்தோஷப்படுவோம்.
நாம் அவர்களது உபகாரிகளாகவும், நலம் விரும்புபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் நமது சுய சொந்தம் இல்லை. நாம் அவர்களது எஜமானர்களாக இருக்கக் கூடாது.
பிறகு அவர்கள் தன்னம்பிக்கையுடன், சுய மரியாதையுடன், சுய அன்புடன், எல்லோருக்கும் அன்புடன், சந்தோஷமான, வெற்றிகரமான நபர்களாக வளர்ந்து விளங்குவார்கள்.