வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும்
வாகனமும் வாகனத்தைச் செலுத்துபவரும்
உடல் வாகனம். மனம் வாகனத்தைச் செலுத்துபவர். வாகனத்தின் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, ஓட்டுனரை கவனிக்காமல் இருப்பது போதுமானதில்லை. உண்மையில், ஓட்டுனருக்கு குறைபாடு இருந்தால், அது வாகனத்தை ஓட்டுவதைக் கூட பாதிக்கக்கூடும்; இருவருக்கும் தீங்கு இழைக்கக் கூடும். அதே போல், உடல் நலனை மட்டும் கவனித்துக் கொண்டு, மன நலனை அசட்டை செய்வது தான் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளும், கேடுகளும் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம்.