உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்

உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்

உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்

 

உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றம் அடையக்கூடும். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏன் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்? நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்து, உங்களது தினசரி வாழ்வை பின்பற்றும்போது, நீங்கள் நிச்சயமான முறையில் நம்பக்கூடியது ஒன்றே ஒன்று தான். அது உங்களது உள்ளமை தான். நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள். அதை நீங்கள் உணராவிட்டாலும், தூக்கத்திலும் நீங்கள் இருக்கிறீர்கள். உடல் அசையாமல் இருந்தாலும், மனம் மட்டுமே வேலை செய்தாலும், கனவுகளிலும் நீங்கள் இருக்கிறீர்கள்.

மற்ற விஷயங்கள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு நாள் உங்களுக்கு இன்பம் தரும் பொருட்கள், பிற்காலத்தில் ஒரு நாள் உங்களுக்கு துயரம் தருகின்றன. நீங்கள் நம்பி, அவர்கள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த நபர்களெல்லாம், உங்களுக்கு சில சமயம் ஏமாற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் மிகவும் நம்பகமானவர்கள், விசுவாசமுள்ளவர்கள் என்று நீங்கள் நினைத்த பெரும்பான்மையான மனிதர்களும், மகிழ்ச்சி தருவது போல் தோன்றிய பொருட்களும் பயனற்றவையாக மாறி விடுகின்றன. அவை உங்களை சந்தோஷப்படுத்துவது நின்று விடுகிறது; அல்லது அவை உங்களுக்கு துன்பத்தை அளிக்கின்றன. 

எனவே, இந்த மாதிரி மாறிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் மீதும் பொருட்கள் மீதும் சார்ந்து இருப்பது உங்களுக்கு நல்லதில்லை என்று இப்போது நீங்கள் அறிவீர்கள். ஆனால், எந்த ஒரு விஷயத்தின் மீது நீங்கள் உங்கள் சந்தோஷத்திற்கும், மன வலிமைக்கும், உடல் நலனுக்கும் திடமாக நம்பலாம்? அது நீங்கள் தான். உங்கள் மனம் தான். உங்கள் உள்ளம் தான்.  

அதனால், உங்கள் மீது திடமான நம்பிக்கைக் கொள்ளுங்கள்! உங்களுக்குத் தேவைப்படும் வலிமையும் துணிவும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கின்றன. எந்த மன உணர்வும் தொட முடியாததாகும். நீங்கள் மனதில் உணர்வது உங்களுடையது மட்டும் தான். நீங்கள் மட்டும் தான் அதை உணர முடியும்.

ஆனால், ஒரு விஷயம் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில், நீங்கள் நேர்மறையான மனப்பாங்கு கொள்வதற்கும், உங்கள் மனதை எழுப்பி வலிமையுடன் இருக்க உற்சாகப்படுத்துவதற்கும், நீங்கள் சரியாக யோசனை செய்வதற்கும், தன்னம்பிக்கைக் கொள்வதற்கும், மற்ற சில பேர் மிக அதிகமான அளவில் உங்களுக்கு உதவி அளிக்கலாம். அதனால் கட்டாயம் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். உண்மையை உறைக்கும் விவேகமுள்ளவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் மீதே திடமான நம்பிக்கைக் கொள்ளுங்கள். இதைப் புரிந்துக் கொண்டவுடன், விடாமல் இந்த நம்பிக்கையைப் பற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் மற்றவர்களிடமிருந்து உதவி பெறும்போது கூட, அந்த பலனை மற்றவர்கள் உணருவதில்லை. நீங்கள் தான் உணருகிறீர்கள். அவர்கள் உங்களுக்குள் எப்போதும் இருக்கும் வலிமையையும் துணிவையும் விழிக்க மட்டுமே தான் செய்தார்கள். ஆனால், மன உணர்வு உங்களுடையது தான். இதன் சிறப்பு என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா? இதன் பொருள் என்னவென்றால், அந்த மன வலிமை, தைரியம், தன்னம்பிக்கை, சுய மரியாதை போன்ற உணர்வுகள் எல்லாம், எப்போதுமே உங்களுக்குள் இருந்து வந்தது, இருந்துக் கொண்டே இருக்கிறது.

எனவே, இதை ஒரு முறை நீங்கள் நன்றாகப் புரிந்துக் கொண்டவுடன், எப்போதும் உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு இனிமேல் வெளிப்புறத்திலிருந்து ஊக்கம் தேவையில்லை. எப்போதெல்லாம் நீங்கள் தகுதியற்றவர், மற்றவர்கள் எல்லாம் மேலானவர்கள் என்று நீங்கள் எண்ணும் போதும், பயத்தால் துன்புறும்போதும், உங்களுக்குள் திடமாக சொல்லிக் கொள்ளுங்கள் : “நான் தகுதியுள்ளவர் தான்! அவர்கள் எல்லாம் வலிமையுடன் இருந்தால், என்னாலும் அப்படி இருக்க முடியும். என்னுடைய சொந்த குறிக்கோளுக்காக நான் இங்கு இருக்கிறேன். அந்த குறிக்கோளை நிறைவேற்ற என்னுள் சக்திகள் உள்ளன. எனக்குள் வலிமை உள்ளது.  நான் திருப்திகரமான வாழ்க்கையை தைரியமாக வாழ முடியும்.”

அதனால் தான் நான் சொல்கிறேன், “விவேகமுள்ள மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்!. 

 

உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!